செய்திகள் :

உடல் எடை கூடுவது தைராய்டு அறிகுறியா? - நம்பிக்கையும் உண்மையும்!

post image

உடல் எடை அதிகரிப்பது தைராய்டு பிரச்னையின் அறிகுறியா?தைராய்டுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

தைராய்டு பிரச்னைகள் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதிலளிக்கிறார் புவனேசுவரம் மணிபால் மருத்துவமனை உட்சுரப்பியல் மருத்துவர் டாக்டர் ஜதின் குமார் மஜ்ஹி.

தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்

உங்களுக்கு தைராய்டு பிரச்னை இருந்தால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும்.

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை. பிரசவத்திற்குப் பிந்தைய தைராய்டிசம் அல்லது லேசான சப்க்ளினிக்கல் ஹைப்போ தைராய்டிசம் போன்ற சில தைராய்டு கோளாறுகள் குணமடையக் கூடியதுதான். இதற்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவையில்லை.

ஆனால், ஹஷிமோட்டோ தைராய்டிடிஸ் போன்ற தீவிர தைராய்டு கோளாறுகளுக்கு பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவை.

உடல் எடை அதிகரிப்பு / உடல் எடை குறைவதற்கு தைராய்டு பிரச்னைதான் காரணம்

தைராய்டு ஹார்மோனில் மாற்றம் ஏற்படுவது உடல் எடையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் உணவு முறைகள், வாழ்க்கை முறை அல்லது பிற ஹார்மோன் பிரச்சனைகளாலும் உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் எடை குறைவது நிகழலாம். பரிசோதனை செய்வதுகொள்வதன் மூலமாக தைராய்டு இருக்கிறதா என உறுதி செய்துகொள்ளலாம்.

அயோடின் உப்பு, தைராய்டு பிரச்னையைத் தடுக்கும்

உடலுக்கு கண்டிப்பாக அயோடின் உப்பு அவசியம். இது காய்ட்டர் எனும் முன்கழுத்து கழலை நோயைத் தடுக்கலாம். ஆனால் பெரும்பாலான தைராய்டு பிரச்னைகள், ஆட்டோ இம்யூன் வகையைச் சேர்ந்தவை. உடலில் உள்ள செல்களைத் தாக்கி அழிப்பவை. அதனால் தைராய்டு, அயோடின் பற்றாக்குறையால் ஏற்படுவதில்லை. அயோடின் உப்பு சாப்பிட்டால் தைராய்டு வராது என்று அர்த்தமல்ல.

தைராய்டு, முன்கழுத்து கழலை நோயை ஏற்படுத்தும்

உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் போன்ற தைராய்டு கோளாறுகள் இருக்கலாம். ஆனால் கழுத்தில் வீக்கம் இருக்காது. தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு முன்கழுத்து கழலை நோய் வர வாய்ப்பு இல்லை.

தைராய்டு பிரச்னைக்கான அறிகுறிகளை எளிதில் அடையாளம் காணலாம்

தைராய்டு கோளாறுகள் மறைமுகமானவை. தைராய்டு அறிகுறிகளான சோர்வு, மனநிலை மாற்றம், எடை மாற்றம் ஆகிய அறிகுறிகளை சிலர் எதிர்கொண்டிருக்க மாட்டார்கள். தைராய்டு பிரச்னைகளைக் கண்டறிய அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

Is weight gain a sign of thyroid problems? need to take thyroid medication for the rest of my life? - Myths and facts about thyroid problems

இதையும் படிக்க | மூளையைத் தின்னும் அமீபா: மனித மூளைக்குள் எப்படி நுழைகிறது? தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

மூளையைத் தின்னும் அமீபா: மனித மூளைக்குள் எப்படி நுழைகிறது? தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

மூளையைத் தின்னும் அமீபா எனும் தொற்றால் கேரளத்தில் இந்த மாதத்தில் மட்டும் 3 பேர் இறந்துள்ளனர். நீர்நிலைகளில் இருந்து இந்த தொற்று எப்படி மனித மூளைக்குள் செல்கிறது? தொற்று ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண... மேலும் பார்க்க

ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏடிஎச்டி கோளாறு! ஏன்? அறிகுறிகள் என்ன?

ஏடிஎச்டி(ADHD) என்பது அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder). இது கவனக்குறைவு / மிகையியக்கக் குறைபாடு என்று கூறலாம். இது குழந்தைகள் அதிகமாக இதனால் ... மேலும் பார்க்க

வார இறுதி நாள்களை வீணாக்குகிறீர்களா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

அலுவலக வேலைக்குச் செல்வோர் பலருக்கும் தோன்றும் ஒரு விஷயம், வார இறுதி நாள்கள் எப்போது வரும்? என்பதுதான். வார இறுதி நாள்களுக்கு என்று வார நாள்களிலேயே பல திட்டங்கள் வைத்திருப்போம். ஆனால் விடுமுறை நாள்களி... மேலும் பார்க்க

ஆற்றுப்படுத்துதல்! பாலியேட்டிவ் கேர் என்பது என்ன? நோயாளிகளுக்கு, முதியோருக்கு ஏன் அவசியம்?

தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மருத்துவ சிகிச்சையின்போது ஏற்படும் வலியைக் குறைக்க உதவும் ஒரு சிறப்பு சிகிச்சை முறைதான் 'பாலியேட்டிவ் கேர்'. இது ஏன் தேவைப்படுகிறது? யாருக்கெல்லாம் அவசியம்?'பா... மேலும் பார்க்க

மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

மெட்டபாலிக் சிண்ட்ரோம் எனும் வளர்சிதை மாற்றப் பிரச்னை சத்தமில்லாமல் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இது வருங்காலத்தில் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ம... மேலும் பார்க்க