குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
ஜார்க்கண்டில் தீவிரமடையும் கனமழை! 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்!
ஜார்க்கண்ட் மாநிலத்தின், மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஏராளமான முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பெரும்பாலான, வட மாநிலங்களில் பருவமழையின் தாக்கமானது பாதிப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், தற்போது ஜார்க்கண்டிலும் அதிகளவில் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், ஜார்க்கண்டின் கும்லா, சிம்டேகா மற்றும் மேற்கு சிங்பம் ஆகிய மாவட்டங்களுக்கு, நாளை (செப்.4) வரை இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கர்ஹ்வா, பலாமு, லடேஹர், லோஹர்டகா, குந்தி, சராய்கேலா கார்சவான் மற்றும் கிழக்கு சிங்பம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன், நிகழாண்டில் (2025) ஜூன் 1 முதல் செப்.1 ஆம் தேதி வரையில் ஜார்க்கண்டில் பெய்த கனமழையின் அளவானது, வழக்கத்தை விட 26 சதவிகிதம் அதிகரித்து 1034.9 மி.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் அஞ்சலி!