செப். 5-ல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!
மிலாது நபியையொட்டி வருகிற செப். 5 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது.
எனினும் அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மத்திய அரசு விடுமுறை தினமான 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மிலாடி நபியை (முஹம்மது நபியின் பிறந்தநாள்) முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே, இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puducherry JIPMER Hospital has announced that outpatient department will not function on September 5th on the occasion of Milad-un-Nabi.
இதையும் படிக்க | அன்புமணிக்கு மீண்டும் கெடு விதித்த ராமதாஸ்!