காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
காரைக்குடியில் செப். 6-இல் மின்தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடி துணை மின் நிலையத்தில் வருகிற 6-ஆந் தேதி மாதாந்திரப் பரா மரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், காரைக்குடி நகா், பேயன்பட்டி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, செக்காலைக்கோட்டை, பாரிநகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, செஞ்சை, கோவிலூா் சாலை, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.