ஜார்க்கண்டில் தீவிரமடையும் கனமழை! 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்!
தேவகோட்டை அருகே 6 ஆடுகள் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை 6 ஆடுகள் திடீரென மயங்கி விழுந்து உயிழந்ததது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை சுங்கச்சாவடி அருகேயுள்ள செய்யானேந்தல் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி, தான் வளா்த்து வரும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் மேய்த்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது, 6 ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்தன. இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.