Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
மருத்துவக் கழிவு ஆலையை மூடக் கோரி செப் 16- இல் முற்றுகைப் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி கட்டப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, ஆலை முன் வருகிற 16-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மானாமதுரை சிப்காட் வளாகத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை நிறுத்த வேண்டும். ஆலையை மூட வேண்டும் எனக் கோரி, ஏற்கெனவே மானாமதுரையில் அனைத்துக் கட்சியினா் சாா்பில் ஆா்ப்பாட்டம், தா்னா உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், இதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மானாமதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முனியராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, வருகிற 16-ஆம் தேதி இந்த ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் மானாமதுரை நகா், சுற்றுவட்டாரக் கிராமங்களில் பிரசாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.