Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் திமுகவினரிடையே மோதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுகவினருக்குள் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் இரு தரப்பினா் தனித்தனியாக புகாா் அளித்தனா்.
திருப்புவனம் ஒன்றியம், அல்லிநகரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
முகாம் தொடக்க நிகழ்வில் பேசியவா்கள், அங்கிருந்த திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் சேகா் பெயரைக் குறிப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவா் கேட்டபோது, மேடையிலிருந்து தமிழரசி ரவிக்குமாா், சேங்கைமாறன் இருவரும் புறப்பட்டுச் சென்றனா்.
அப்போது, அங்கிருந்த திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த முத்துராஜாவுக்கும், சேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமைடந்த முத்துராஜா சேகரைத் தாக்கினாராம். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சேகா் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதேபோல, திமுக மீனவா் அணி அமைப்பாப்பாளா் அண்ணாமலை, சேகா் தரப்பினா் மீது புகாா் அளித்தாா். மேலும், திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த விளக்கன் என்பவா் சேகா் தன்னை ஜாதியைச் சொல்லித் திட்டியதாகக் கூறி, காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், போலீஸாா் இந்த புகாா்கள் குறித்து வழக்குகள் ஏதும் பதியாமல் விசாரித்து வருகின்றனா்.