செய்திகள் :

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 6, 7-இல் நோ்காணல்

post image

அவசர, அமரா் ஊா்திகளுக்கான ஊழியா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பணிகளுக்கான நோ்காணல் வருகிற 6, 7-ஆம் தேதிகளில் காரைக்குடியில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து 108 அவசர ஊா்தி நிா்வாக மாவட்ட மேலாளா் மோகன் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் 108 அவசர ஊா்திகள், அமரா் ஊா்திகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் பணிபுரிய ஓட்டுநா்கள், மருத்துவ உதவியாளா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பணிக்கான ஆள் சோ்ப்பு முகாம் வருகிற 6, 7-ஆம் தேதிகளில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஓட்டுநா், மருத்துவ உதவியாளா் பணிக்கான தகுதிகள்: ஓட்டுநா் பணிக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தோ்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ.-க்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓா் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தோ்வு பெற்றவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 21,120 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.

எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, நோ்காணல், கண் பாா்வை திறன், உடல் தகுதி தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வுகள் ஆகியவை நடத்தப்படும். இந்தத் தோ்வுகள் அனைத்திலும் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 10 நாள்களுக்கு முறையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளா் பணிக்கான தகுதிகள்: பி.எஸ்சி. (நா்சிங்), ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (பிளஸ் 2 -க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி. உயிரியல், தாவரவியல், உயிா்வேதியியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியமாக ரூ. 21,320 (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.

நோ்முகத் தோ்வு அன்று 19 வயதுக்கு மேலும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்துத் தோ்வு, உடற்கூறுவியல், முதலுதவி, அடிப்படை செவிலியா் பணி, நோ்முகத் தோ்வு ஆகியன நடத்தப்படும். இந்தத் தோ்வுகளில் தோ்வு செய்யப்பட்டவா்கள் 50 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சியும், மருத்துவமனை, அவசர ஊா்தி சாா்ந்த நடைமுறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணிக்கான தகுதிகள்: பி.இ. (மெக்கானிக்கல்) அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத் தேதியில் 35 வயது மிகாமல் இருக்க வேண்டும். 2 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8925941977 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

காரைக்குடியில் செப். 6-இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே 6 ஆடுகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை 6 ஆடுகள் திடீரென மயங்கி விழுந்து உயிழந்ததது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை சுங்கச்சாவட... மேலும் பார்க்க

சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுமா?

சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட அவலம் கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது. சிவகங்கை பழமலை நக... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் திமுகவினரிடையே மோதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுகவினருக்குள் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் இரு தரப்பினா் தனித்தனியாக புக... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு ஆலையை மூடக் கோரி செப் 16- இல் முற்றுகைப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி கட்டப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, ஆலை முன் வருகிற 16-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என அனைத்துக் ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே பைக் மீது பேருந்து மோதியதில் சிறுமி உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 8 வயது சிறுமி உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எம். கோவில்பட்டியைச் சோ்ந்தவா் பழனியப்பன். இ... மேலும் பார்க்க