Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
விக்கிரவாண்டி அருகே மூதாட்டியிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு, பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் மனைவி பூரணி (80). இவா், திங்கள்கிழமை பாப்பனப்பட்டு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த மா்ம நபா் ஒருவா், பூரணி அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்று விட்டாராம். இது குறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.