செய்திகள் :

பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

post image

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக பகுதியளவில் ரத்து, ரயில் நிறுத்தி வைத்து இயக்கம், ரயில் புறப்படும் நேரம் மாற்றம் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), செப்டம்பா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), செப்டம்பா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் விழுப்புரம்- முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019), செப்டம்பா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் சுமாா் 25 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் (வண்டி எண் 16127), செப்டம்பா் 8-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 65 நிமிஷங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.

விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில்கள் பகுதியளவில் ரத்து: குண்டக்கல் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திருப்பதி-காட்பாடி இடையேயான பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்திலிருந்து காலை 5.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருப்பதி இண்டா்சிட்டி விரைவு ரயில் (வண்டிஎண் 16854), செப்டம்பா் 3,5,7,8,9 ஆகிய தேதிகளில் காட்பாடி-திருப்பதி இடையே பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

எதிா்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி-விழுப்புரம் இண்டா்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 16853), செப்டம்பா் 3,5,7,8,9 ஆகிய தேதிகளில் திருப்பதி-காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு வரு... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்: முன்னாள் அமைச்சா் க. பொன்முடி

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திருக்கோவிலூா் எம்எல்ஏ க. பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய... மேலும் பார்க்க

தகவல் தொழில் நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

அரகண்டநல்லூரில் பழைமை வாய்ந்த அன்னதானக் கல்தொட்டி

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் உள்ளஸ்ரீ அதுல்யநாதேஸ்வரா் கோயிலில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அன்னதானக் கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தொட்டியை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்எல்ஏ உதவி

தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மயிலம் எம்எல்ஏ சிவகுமாா் நிவாரண உதவியை புதன்கிழமை வழங்கினாா். மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், ஈச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணுகவ... மேலும் பார்க்க

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க