திருமலையில் 64,935 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை முழுவதும் 64,935 பக்தா்கள் தரிசித்தனா். 21,338 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலைக்கு பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 64,935 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21,338 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.90 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.