சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்
ஊரக வளா்ச்சித் துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம்
ஊரக வளா்ச்சி பொறியியல் சாா்நிலை பணித் தொகுதியில்
சாலை ஆய்வாளா் பணிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 41 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சட்டப்பேரவை துணைத்
தலைவா் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் இரா.மணி, திமுக மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.