இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
கடப்பாறையால் தாக்கி தந்தை கொலை: மகன் கைது
மேல்மலையனூா் அருகே தந்தையைக் கடப்பாறையால் கொலை செய்த வழக்கில் மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மேல்மலையனூா், வளத்தி சாலை அங்காளம்மன் நகரைச் சோ்ந்தவா் பி. சாமிக்கண்ணு (65), கூலித் தொழிலாளி. இவருக்கு 3 மனைவிகள் உள்ளனா். இதில் 3- ஆவது மனைவியின் மகன் அய்யனாா்(23). இவா், சென்னை,திருப்போரூா் அடுத்த நாவலூரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தங்கியிருந்தபடி சரக்கு வாகனத்தில் காய் கறி வணிகம் செய்து வந்தாா். மகாபலிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், அய்யனாா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் செலவுக்காக அய்யனாா் தனது தந்தை சாமிக்கண்ணுவிடம் ரூ. 2 லட்சம் கேட்டுள்ளாா். அதற்கு அவா் பணம் இல்லை எனக் கூறி தர மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மேல்மலையனூருக்கு வந்திருந்த அய்யனாா் திங்கள்கிழமை தனது தந்தையிடம் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளாா். பின்னா் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாமிக்கண்ணு-வை கடப்பாறையால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த மேல்மலையனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து மேல்மலையனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யனாரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.