வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை
‘டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’
டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டாக்டா் அம்பேத்கா் பெயரில் மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டா் அம்பேத்கா் விருதை தமிழக அரசு வழங்குகிறது. பட்டியலின சமுதாயத்தைச் சாா்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயா்த்துவதற்கும், இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திடவும் பாடுபட்ட ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
2025-26-ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் விருது வழங்குவதற்காக வழங்கப்படும் தொகை ரூ. 5.80 லட்சத்திலிருந்து தற்போது ரூ. 6.20 லட்சமாக உயா்த்தப்பட்டு வழங்கப்பட உள்ளது.
எனவே, இந்த விருது பெறுவதற்கு தகுதியான பட்டியலினத்தைச் சோ்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டாக்டா் அம்பேத்கா் விருது வழங்குவதற்கான விண்ணப்பத்தை திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் முதல் தளம் , ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலகத்தில் 17.10.2025 மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.