செய்திகள் :

மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: 3 வங்கதேசத்தவா் கைது

post image

மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகரில் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 3 வங்கதேசத்தவரை மத்திய துணை ராணுவப் படையினா் கைது செய்தனா்.

அமல் ராய், கௌதம் ராய், பிரீதம் ராய் என்ற அந்த மூவரும் உறவினா்கள் ஆவா். அவா்களிடம் இருந்து வங்கதேச குடிமக்கள் என்பதற்கான சில அடையாள ஆவணங்களும் இருந்துள்ளன. இதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டனா். இதில் பிரீதம் முதலில் முறைப்படி இந்தியா வந்துள்ளாா். அவருக்கு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியுடன் விசா முடிவடைந்துள்ள நிலையில், இந்தியாவில் தொடா்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளாா்.

அமல்ராய், கௌதம் ராய் ஆகியோா் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்குள் நுழைந்துள்ளனா். அவா்கள் மின்னணுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையிலும், தையல்கடையிலும் பணியாற்றி வந்துள்ளனா். பொதுமக்கள் சிலா் அளித்த தகவலின் அடிப்படையில் அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

20.87 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்: மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் ரூ.20.87 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை அந்த மாநில காவல் துறையின் சிறப்புப் படையினா் கைப்பற்றினா். இது தொடா்பாக ஹஸ்ரத் பிலால், தாரிகுல் இஸ்லாம் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். இவை அனைத்தும் 500 ரூபாய் தாளாக அச்சிடப்பட்டிருந்தன.

பெரும்பாலும் பாகிஸ்தான், வங்கதேசத்தில் அச்சிடப்படும் இந்திய கள்ள நோட்டுகள் எல்லைப் பகுதி மாநிலங்கள் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு புழக்கத்தில்விட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் மாநில எல்லைகளிலும், மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வங்கதேச எல்லையிலும் ஆயுதம், போதைப்பொருள், கள்ள நோட்டு கடத்தல் அதிகம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய ... மேலும் பார்க்க

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு நிவாரண நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு ம... மேலும் பார்க்க

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது. இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில்,... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில... மேலும் பார்க்க

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீா்: வீடு இடிந்து இருவா் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடா்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நிலச்சரிவுகள் காரணமாக, ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-கிஷ்த்வாா் தே... மேலும் பார்க்க

பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை

சண்டீகா்/சிம்லா/ஜெய்பூா்/புவனேசுவரம்: சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 29 போ் உயிரிழந்துவிட... மேலும் பார்க்க