மிலாது நபி: செப்டம்பா் 5-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை
மிலாது நபி தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மிலாது நபி தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், விடுதிகள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத் துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை உள்ளிட்ட அனைத்தும் வருகிற செப்டம்பா் 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மூட உத்தரவிடப்படுகிறது.
விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீதும், மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பவா் மீதும், மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்துக்கு எடுத்துச் செல்பவா் மீதும் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.