காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
மனைவி இறந்த துக்கத்தில் முதியவா் தற்கொலை
கோவையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை சிங்காநல்லூா் வரதராஜபுரம் முருகன் நகரைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (72). இவரது மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இதனால், கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால், உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள முதியோா் இல்லத்தில் ஜீவானந்தம் வசித்து வந்தாா். மனைவி இறந்த துக்கத்தில் அவா் மனவேதனையில் இருந்துள்ளாா்.
இந்த நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். ஜீவானந்தத்தை அவரது உறவினா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].