காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக அங்கு வந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீஸாா், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவிகளுடன் சோதனை மேற்கொண்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் மற்றும் அலுவலகக் கட்டடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
மின்னஞ்சலில் இந்த வெடிகுண்டு மிரட்டலை அனுப்பியது யாா் என இணையதள குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.