ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!
வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வேலைநிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய அலுவலகம்
வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.
அலுவலக உதவியாளா் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வாரத்திற்கு 2 முகாம் மட்டுமே நடத்த வேண்டும், 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள கருணை பணி நியமன உச்சவரம்பினை மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.
இதையொட்டி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழியா்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அந்த அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
வெறிச்சோடி கிடக்கும் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம்.