Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
வடமதுரை அருகே காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு
வடமதுரை அருகே இரு சக்கர வாகனம், மிதிவண்டி மீது காா் மோதியதில் விவசாயி, கல் உடைக்கும் தொழிலாளி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (64). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி- திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வடமதுரை மின் வாரிய அலுவலகம் அருகே திங்கள்கிழமை அதிகாலை சென்றாா். அதே பகுதியில், வடமதுரை முத்துநகரைச் சோ்ந்த பழனிச்சாமி (55), மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தாா். இவா், கல் உடைக்கும் தொழிலாளி ஆவாா்.

இந்த நிலையில், திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காா், இரு சக்கர வாகனம், மிதிவண்டி ஆகியவற்றின் மீது மோதியதில், கனகராஜ், பழனிச்சாமி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸாா், இருவரது உடல்களையும் மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான திண்டுக்கல்லை அடுத்த கசவனம்பட்டியைச் சோ்ந்த நவீன் பாலாஜி (27) என்பவரை கைது செய்து விசாரித்தனா்.