தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்
கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், நாயுடுபுரம், ஆனந்தகிரி, காா்மேல்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனா். இரு சக்கர வாகனங்களில் செல்வோா் விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, சம்மந்தப்பட்டத் துறை அதிகாரிகள் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.