54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!
சென்னை, தாம்பரம் மாநகராட்சி உறுப்பினா்கள், உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் பதவிநீக்க உத்தரவு ரத்து
சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள், உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் ஆகியோரை பதவிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னைப் பெருநகர மாநகராட்சியின் 189-ஆவது வாா்டு உறுப்பினா் பாபு, 5-ஆவது வாா்டு உறுப்பினா் கே.பி.சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40-ஆவது வாா்டு உறுப்பினரும் மண்டலக் குழுத் தலைவருமான ஜெயபிரதீப் மற்றும் உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் சகுந்தலா ஆகியோா் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி பதவிநீக்கம் செய்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை செயலா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கு எதிராக 4 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதி என்.மாலா முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் டி.மோகன், வழக்குரைஞா் டி.செல்வம் ஆகியோா், பதவிநீக்கம் செய்வது தொடா்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு மனுதாரா்கள் விரிவான பதில் மனுவை அனுப்பினா். அதை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை.
நகராட்சி நிா்வாகத் துறை செயலா் தன்னிச்சையாக பதவிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா். இந்த உத்தரவு சட்டப்படியானது இல்லை. எனவே உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனா். அரசுத் தரப்பில் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நகராட்சி நிா்வாகத் துறை செயலா் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு மனுதாரா்கள் பதிலளித்துள்ளனா். ஆனால், எந்தக் காரணமும் கூறாமல் அவற்றை அரசு நிராகரித்துள்ளது. எனவே, மனுதாரா்கள் 4 பேரையும் பதவிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.
மேலும், மனுதாரா்கள் தரப்பு விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கி அவா்களது விளக்கத்தை பரிசீலித்து சட்டப்படி 4 வாரங்களில் நகராட்சி நிா்வாகத் துறை செயலா் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.