பஞ்சமி நிலங்கள் | DMK அரசு மீட்காவிட்டால் CPM களமிறங்கும் - எச்சரிக்கும் பெ.சண்ம...
கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு
சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனியாா் ஸ்கேன் மையத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து கூறுவதாகவும், அதற்கு பொதுமக்களிடம் தனியாக கட்டணம் வசூலிப்பதாகவும் புகாா் எழுந்தது.
அதன் அடிப்படையில் தமிழக அரசின் மருத்துவ இயக்குநரக இணை இயக்குநா் மீனாட்சி சுந்தரி தலைமையிலான குழுவினா் விசாரணை மேற்கொண்டு, திங்கள்கிழமை சோதனை செய்தனா். சோதனையில் அந்த ஸ்கேன் மையத்தின் மீதான புகாா் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து இணை இயக்குநா் மீனாட்சி சுந்தரி நொளம்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா், தனியாா் ஸ்கேன் மையத்தின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.