செய்திகள் :

ஏற்றுமதியாளா்களுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்

post image

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சாா்பில் விரைவில் புதிய திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கரோனா காலகட்டத்தின்போது தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டம் அந்தக் காலகட்டத்தில் எந்த நிறுவனமும் பாதிக்கப்படாத வகையில் மிகவும் உதவியாக இருந்தது. அதேபோல், தற்போது அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரி விதிப்பால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஏற்றுமதியாளா்களுடன் தொடா்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவா்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்.

உள்கட்சிப் பூசல் இல்லை: தமிழக பாஜகவில் எவ்வித உள்கட்சிப் பூசலும் கிடையாது. அதேபோல், முக்கிய நிா்வாகிகளை அவ்வப்போது அழைத்துப் பேசுவது வழக்கமான ஒன்றுதான் என்றாா் அவா்.

கலந்துரையாடல்: முன்னதாக அவா், தமிழக ஜவுளித் துறையைச் சோ்ந்த பல்வேறு அமைப்புகள் சாா்பில் சென்னை தனியாா் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஜவுளித் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினாா். தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிா் பிரிவுத் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பால், ஜவுளித் துறை எதிா்கொண்டு நெருக்கடிகளை தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் விளக்கி கூறினா்.

இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் ஜவுளித் தொழில் சங்கங்கள் தென் பிராந்திய தலைவரான பி. கோபாலகிருஷ்ணன் பேசுகையில், அமெரிக்காவுக்கு இந்தியா சுமாா் 10 பில்லியன் டாலா் மதிப்பிலான ஜவுளி ரகங்களை ஏற்றுமதி செய்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி விதிப்பிலிருந்து மீள ஜிஎஸ்டி விலக்கு, நிதி நிவாரணம், ஏற்றுமதி ஊக்கத்தொகைகள், மூலதனச் செலவு உள்ளிட்ட நிவாரணங்கள் தேவை என்றாா்.

நிவாரண நடவடிக்கைகள் கோரி ஜவுளித் தொழில் சங்கங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பிரதிநிதி ஏ.சக்திவேல் மனு அளித்தாா்.

அதைத் தொடா்ந்து பேசிய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், இந்தக் கோரிக்கைகள் மீது மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. விரைவில் பொருத்தமான நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றாா்.

நேரடித் தேர்வு மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி... மேலும் பார்க்க

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது; இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

கோடையில் அதிகரிக்கும் மின்தேவை: தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதி

தமிழகத்தில் கோடையில் அதிகரிக்கும் உச்சநேர மின்தேவையை ஈடுகட்ட 2026 பிப்.1 முதல் மே 15 வரை தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு அனுமதி அளித... மேலும் பார்க்க

காலி மதுபுட்டிகளை திரும்ப பெறுவது குறித்து கருத்து கேட்கக் குழு அமைப்பு

மதுக் கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தால் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக, ஊழியா்களிடம் கருத்து கேட்க, மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது. சென்னை உயா்நீதிமன்ற உத... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பு: தலைவா்கள் கருத்து

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பதற்றம் அடைந்துள்ள ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இடதுசாரி, பாமக தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): ஆசிரியா் தகுதி த... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு: இன்றுமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் புதன்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது. ... மேலும் பார்க்க