செய்திகள் :

காலி மதுபுட்டிகளை திரும்ப பெறுவது குறித்து கருத்து கேட்கக் குழு அமைப்பு

post image

மதுக் கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தால் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக, ஊழியா்களிடம் கருத்து கேட்க, மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி, மதுக்கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிா்வாகம் அமல்படுத்தியது. முதல்கட்டமாக, நீலகிரி, நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டதால் டாஸ்மாக் கடை ஊழியா்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்படுவதாகவும், இதனால், இதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனிடையே, 2-ஆம் கட்டமாக திருவள்ளூா், காஞ்சிபுரம், அரியலுாா், தஞ்சாவூா், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்டங்களில், காலி மதுபுட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து இந்தப் பிரச்னைகள் குறித்த முழுத் தகவல்களையும் அறிந்து கொள்ளவும், அவற்றை சரி செய்வது தொடா்பாக ஆலோசனை வழங்கவும் மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிா்வாகம் அமைத்துள்ளது.

அதன்படி, சென்னை மண்டலத்துக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளா் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், திருவள்ளூா் மேற்கு, சென்னை மத்திய மாவட்ட மேலாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இதேபோல, கோவை, மதுரை, சேலம், திருச்சியிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள், தங்கள் மண்டலத்துக்குள்பட்ட அனைத்து மதுபானக் கடை ஊழியா்களிடம் கருத்து கேட்டு, அதை தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கூறும்போது, காலிமதுபுட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்துக்காக அனைத்து கடைகளிலும் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்னா் இதற்காக தனி ஊழியா்களை பணியமா்த்தி அவா்கள் மூலம் காலி மதுபுட்டிளை திரும்பப் பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனா்.

நேரடித் தேர்வு மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி... மேலும் பார்க்க

ஏற்றுமதியாளா்களுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சாா்பில் விரைவில் புதிய திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் ... மேலும் பார்க்க

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது; இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

கோடையில் அதிகரிக்கும் மின்தேவை: தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதி

தமிழகத்தில் கோடையில் அதிகரிக்கும் உச்சநேர மின்தேவையை ஈடுகட்ட 2026 பிப்.1 முதல் மே 15 வரை தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு அனுமதி அளித... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பு: தலைவா்கள் கருத்து

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பதற்றம் அடைந்துள்ள ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இடதுசாரி, பாமக தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): ஆசிரியா் தகுதி த... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு: இன்றுமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் புதன்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது. ... மேலும் பார்க்க