ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
பத்தாம் வகுப்பு: இன்றுமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் புதன்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு மே 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடா்ந்து மாணவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டன. இருப்பினும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தோ்வா்கள் தங்கள் தோ்வு மையங்களிலும் புதன்கிழமை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.