செய்திகள் :

நேரடித் தேர்வு மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

post image

நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடித் தேர்வு முறையிலும், 50 சதவீதம் பதவி உயர்வு அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன. இந்த 50 சதவீத நேரடி நியமனத்தில் 2 சதவீத இடங்கள் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்படும்.

அந்தவகையில் தமிழகத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடித் தேர்வு நடத்தி 2,511 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

அதில், நேரடி நியமனத்தில் தங்களுக்கு வழங்க வேண்டிய 2 சதவீத இடங்களை நிரப்பாமல் 2,511 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கக் கூடாது என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நேரடித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்திரகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டு 2,511 பேர் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் அவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு பேருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான, அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், 2,511 பேருக்கான பணி நியமன உத்தரவுகள் தயாராக உள்ளன. 2 சதவீத ஓதுக்கீட்டில் தகுதியான ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அரசு ஏற்கெனவே நியமனம் வழங்கியுள்ளது. தற்போது அந்த 2 சதவீத ஒதுக்கீட்டில் காலியிடங்கள் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நேரடி நியமனங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி அரசு பணி நியமன உத்தரவுகளை வழங்கலாம். இதனால், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பு வராது.

எனவே, அவர்கள் இந்தப் பணி நியமனத்தில் குறுக்கிட முடியாது. இவர்களுக்கான 2 சதவீத இடஒதுக்கீடு குறித்து இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையில் முடிவு செய்யப்படும் எனக் கூறி விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

2,511 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றுமுதல் நியமன கலந்தாய்வு

தமிழக அரசுப் பள்ளிகளில் 2,511 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு சென்னையில் புதன், வியாழன் (செப்.3, 4) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் 2024 பிப்.4-ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் மே 18-இல் வெளியிடப்பட்டன. தொடர்ந்து அந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18-இல் வெளியிடப்பட்டது.

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, நீதிமன்ற தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற 151 அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக அண்மையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து அரசுப் பள்ளிக் கல்வியில் தற்போது 2,511 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் ஷெனாய் நகர் திரு.வி.க. அரசு மேல்நிலைப் பள்ளி, கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பெயின் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, தியாகராயநகர் வித்யோதயா மகளிர் மேல்நிலைப் பள்ளி , அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம் சிஎஸ்ஐ எட்வர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 இடங்களில் புதன்கிழமை பணிநியமன கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

அதில் அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர்களுக்கு மட்டும் புதன், வியாழன் ஆகிய நாள்களில் கலந்தாய்வு நடைபெறும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்தக் கலந்தாய்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடிதம், தற்காலிக தெரிவு கடிதம் ஆகியவற்றுடன் வருமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்றுமதியாளா்களுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சாா்பில் விரைவில் புதிய திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் ... மேலும் பார்க்க

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது; இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

கோடையில் அதிகரிக்கும் மின்தேவை: தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதி

தமிழகத்தில் கோடையில் அதிகரிக்கும் உச்சநேர மின்தேவையை ஈடுகட்ட 2026 பிப்.1 முதல் மே 15 வரை தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு அனுமதி அளித... மேலும் பார்க்க

காலி மதுபுட்டிகளை திரும்ப பெறுவது குறித்து கருத்து கேட்கக் குழு அமைப்பு

மதுக் கடைகளில் காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தால் ஏற்படும் பிரச்னைகள் தொடா்பாக, ஊழியா்களிடம் கருத்து கேட்க, மண்டல அளவிலான குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது. சென்னை உயா்நீதிமன்ற உத... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பு: தலைவா்கள் கருத்து

உச்சநீதிமன்ற தீா்ப்பால் பதற்றம் அடைந்துள்ள ஆசிரியா்களின் பணிப் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இடதுசாரி, பாமக தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): ஆசிரியா் தகுதி த... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு: இன்றுமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் கடந்த மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் புதன்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது. ... மேலும் பார்க்க