Coolie: "நாங்கள் படத்தில் டைம் டிராவல் இருக்கிறது எனக் கூறவில்லை; ஆனால்" - லோகேஷ...
கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியா்
சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள 20 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட வருவாய் அலகில், வருவாய் வட்டம் வாரியாக மொத்தம் 20 கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. வட்டம் வாரியாக நியமனம் செய்யப்படும் கிராம உதவியாளா் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டு உள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபா் 1 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும்.
காலிப் பணியிட விவரம், கல்வித் தகுதி, இதர தகுதிகள் மற்றும் இனச்சுழற்சி குறித்த விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.