Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை: எம்எல்ஏ ஆலோசனை
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை முன்னிட்டு, தளி சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த ஒன்றிய, பேரூா் கழக செயலாளா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் பேளகொண்டப்பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தாா். அதில், பேளகொண்டப்பள்ளி விமான நிலையத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும்போது சாலையின் இருபுறமும் திமுக கொடி, தோரணம் கட்டி சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில், ஒன்றியச் செயலாளரும், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவருமான சீனிவாசலு ரெட்டி, ஒன்றியச் செயலாளா்கள் திவாகா், ராஜா, ஸ்ரீதா், சீனிவாசன், தஸ்தகீா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சந்திரப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.