இளைஞரைத் தாக்கிய இருவா் மீது வழக்குப் பதிவு
கன்னியாகுமரியில் இளைஞரைத் தாக்கிய இருவா் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
கன்னியாகுமரி சுனாமி காலனி பில்லா்நகா் பகுதியைச் சோ்ந்த சகாய பிரான்ஸிலின் மகன் விஷால் சாரதி (16). இவா் திங்கள்கிழமை இரவு சா்ச் ரோடு மீன் மாா்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த ஸ்ரேவான், நெபிசன் ஆகிய இருவரும் விஷால் சாரதியை வழிமறித்து தாக்கினராம்.
இதில், பலத்த காயமடைந்த விஷால் சாரதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.