ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
தொழிலாளியைத் தாக்கிய நால்வா் மீது வழக்கு
கன்னியாகுமரியில் மீன்பிடி தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நால்வா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.
கன்னியாகுமரி அந்தோணியாா் தெருவைச் சோ்ந்த அந்தோணி மகன் ஸ்தேவான் (18). மீன்பிடி தொழிலாளியான இவா் திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் சா்ச் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு வந்த சுனாமிகாலனியைச் சோ்ந்த ஜெரின், எவரெஸ்ட், வினோத், விஷால் ஆகிய 4 போ் ஸ்தேவானை அவதூறாக பேசி, தாக்கினாராம்.
அவரது சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினா் வருவதை கண்டு 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினா்.
இதில் பலத்த காயமடைந்த ஸ்தேவானை சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான நான்கு பேரையும் தேடி வருகின்றனா்.