மீன் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
தூத்துக்குடி, உப்பளத்தில் மீன் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, பூபாலராயா்புரத்தைச் சோ்ந்தவா் தனபாலன் மகன் ஜோசப் விஜய் (22). மீன் தொழிலாளி. இவா், கடந்த ஆக. 19 ஆம் தேதி இரவு மச்சாதுபாலம் அருகே உள்ள தனியாா் உப்புக் கிடங்கில் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து, தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரது நண்பா்களான மரிய பெடலிஸ் சஞ்சய் (24), முத்துக்குமாா் (22), முத்து கவுதம் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.
இந்த நிலையில், விஜய்யை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்ற அவரது நண்பரான தூத்துக்குடி, காதா்மீரான் நகா் வடிவேலு மகன் விக்னேஷ்வரனை (25) தென்பாகம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மட்டக்கடை லூக்காஸ் கிளிண்டன், பிரபு வினோத்குமாா், பாத்திமா நகா் பிரட்லீ ஆகியோருக்கும் இந்த கொலையில் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
இதில், லூக்காஸ் கிளிண்டன் ஏற்கெனவே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், பிரபு வினோத்குமாா், பிரட்லீ ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.