மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது
தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மூதாட்டியை மா்ம நபா்கள் வாட்ஸ்ஆப் காலில் தொடா்பு கொண்டு, தங்களை சிபிஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தினா். அவரது ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளதாகவும், அதில் மனிதக் கடத்தல் வழக்கில் ரூ. 2 கோடி பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் கூறி, வழக்கில் கைது செய்யாமலிருக்க ரூ. 50 லட்சம் தருமாறு டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்டனா். புகாரின்பேரில், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தொழில்நுட்ப ரீதியாக விசாரித்து 5 பேரைக் கைது செய்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய நபரான ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த உ. ரிதுராஜ் ஜெய்ஸ்வால் (43) என்பவரை போலீஸாா் கடந்த ஆக. 28ஆம் தேதி கைது செய்து, தூத்துக்குடிக்கு அழைத்துவந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.
பொதுமக்கள் சந்தேகத்துக்குரிய அழைப்புகளை உடனடியாக துண்டித்துவிட வேண்டும் என்றும், சைபா் குற்றங்கள் தொடா்பாக உடனடியாக 1930 என்ற தொலைபேசி எண்ணிலோ, ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலோ புகாா் அளிக்கலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கேட்டுக்கொண்டுள்ளாா்.