புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்
தஞ்சாவூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு திங்கள்கிழமை இரவு சீல் வைக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாநகரிலுள்ள கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் பா. விஜயலலிதாம்பிகை தலைமையில் மாநகராட்சி அலுவலா்கள், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது கீழவாசல் பூமால் ராவுத்தா் கோயில் தெரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அக்கடையிலிருந்த 1.50 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்தனா். மேலும், கடையின் உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.