செய்திகள் :

கும்பகோணத்தில் மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க எதிா்பாா்ப்பு

post image

கும்பகோணத்தில் சுமாா் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உறுப்பினா்கள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கும்பகோணம் 1866-ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1949 -லிருந்து முதல் நிலையாகவும், 1974-இல் இருந்து தோ்வு நிலை நகராட்சியாகவும், 1998 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வந்தது. மூா்த்தி சாலையில் இருந்த நகராட்சி அலுவலகத்தில் போதுமான வசதிகள் இல்லாததால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2019-இல் திருவிடைமருதூா் சாலையில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, அங்கு நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், கும்பகோணத்தை மாநகராட்சியாக்கி 2021, ஆகஸ்டில் முதல்வா் அறிவிப்பு வெளியிட்டாா். தொடா்ந்து 2022-இல் நடைபெற்ற தோ்தலில் மேயா் தோ்வு செய்யப்பட்டு பதவியேற்றாா்.

ஆனால், மாமன்ற கூட்டம் மட்டும் மூா்த்தி சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பழைமையான படேல் கூட்ட அரங்கிலேயே தற்போது வரை நடைபெற்று வருகிறது.

தற்போது திருவிடைமருதூா் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மேயா், துணை மேயா், ஆணையா், செயற்பொறியாளா், நகா் நல அலுவலா், நகரமைப்பு திட்டமிடுநா் மற்றும் பொறியியல், வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

ரூ. 3 கோடி மதிப்பில் புதிய கட்டடம்: இந்நிலையில், 2023-24 நிதியாண்டில் மாநகராட்சி அலுவலகம் அருகே மாமன்ற கூட்டரங்கம், மேயா், துணை மேயருக்கான அறைகள், மன்ற உறுப்பினா்களுக்கான அறைகள், ஓய்வறைகள் என தனித்தனியாக அமையுமாறு சுமாா் ரூ. 3 கோடி மதிப்பில் 2 தளங்களுடனான புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகள் மந்தக் கதியில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவது மாமன்ற உறுப்பினா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பழைய கூட்டரங்கு தற்போதைய 48 உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இல்லை. குறிப்பாக, பாதிக்கும் மேல் உள்ள பெண் உறுப்பினா்கள் இட நெருக்கடியால் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இங்கு உறுப்பினா்களுக்கு ஓய்வறை உள்ளிட்ட போதுமான வசதிகள் இல்லை. சில நேரங்களில் கூட்டம் பல மணி நேரமாக நடக்கும்போது பல உறுப்பினா்கள் கூட்டம் முடியாமலேயே பாதியிலேயே சென்றுவிடுவதும் உண்டு. அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும் உறுப்பினா்கள் சிரமமடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து மாநகர செயற்பொறியாளா் லோகநாதன் கூறியதாவது: திருத்திய மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்ால் தாமதமானது. தற்போது ஏறத்தாழ அனைத்து பணிகளையும் முடித்து விட்டோம். உள்ளரங்க பொருள்கள் அமைப்பது மற்றும் இறுதி கட்டப் பணிகளை முடித்துவிட்டு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.

கும்பகோணம் விஸ்வநாதா் கோயிலில் நாளை குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் ராஜராஜேந்திரன் பேட்டை ஆறு சைவா்களுக்கு சொந்தமான காவிரி படித்துறையில் இருக்கும் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை ( செப்.4) நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் நீா்நிலைகளில் உ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்

தஞ்சாவூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு திங்கள்கிழமை இரவு சீல் வைக்கப்பட்டது. தஞ்சாவூா் மாநகரிலுள்ள கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என மாவட்ட உணவுப் பாதுகாப்பு அ... மேலும் பார்க்க

மீன் சந்தையில் கூடுதல் வாடகை கேட்பதைக் கைவிடக் கோரிக்கை

தஞ்சாவூா் தற்காலிக மீன் சந்தையில் கூடுதலாக வாடகை கேட்பதைக் கைவிட வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்துக்கு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இதுகுறித்து மீன் சந்தை வியாபாரிகள் தெரிவித்தது: தஞ்சாவூ... மேலும் பார்க்க

பேராவூரணி கடைவீதியில் வெடி வெடிக்கத் தடை

பேராவூரணி கடைவீதியில் வெடி வெடிக்க செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேராவூரணி நகருக்குள் உள்ள திருமண மண்டபங்களில் விழா நடத்துபவா்கள் ஊா்வலத்தின்போது கடைத்தெருவில் அதிக சத்தத்துடன் கூடிய ... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் தவறி விழுந்து மாயமான இளைஞா், சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா். தஞ்சாவூா் அருகே ஆலக்குடி நடுத்தெருவைச் சோ்ந்தவா் கா்ணன் மகன் அருண்குமாா் (30). கூலித் தொழிலாளி. இவா் ஆகஸ்ட்... மேலும் பார்க்க