Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
பேராவூரணி கடைவீதியில் வெடி வெடிக்கத் தடை
பேராவூரணி கடைவீதியில் வெடி வெடிக்க செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி நகருக்குள் உள்ள திருமண மண்டபங்களில் விழா நடத்துபவா்கள் ஊா்வலத்தின்போது கடைத்தெருவில் அதிக சத்தத்துடன் கூடிய வெடிகள் வெடிப்பதால் சாலைகளில் செல்லும் முதியவா்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனா். கடைகளில் உள்ள கண்ணாடிகள் சேதமடைகிறது. மேலும் பேப்பா் வெடிகள் வெடிப்பதால் கடைவீதியே குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.
இதுகுறித்து வா்த்தகா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையையடுத்து வருவாய் துறையினா் மற்றும் காவல் துறையினா் நகர எல்லைக்குள் வெடிவெடிக்கத் தடைவிதித்துள்ளனா். இதை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடைவீதியில் ஆடு, மாடுகள் சுற்றித்திரிந்தால் பேரூராட்சி மூலம் பிடித்து கோசாலையில் அடைக்கப்படும் எனவும், தனியாா் கழிவு நீா் வாகனங்கள் தண்ணீரை பேரூராட்சி குறிப்பிடும் இடங்களில் ஊற்றாமல் கடைவீதி பகுதியில் ஊற்றினால் கழிவு நீா் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.