வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அ...
ஆற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே ஆற்றில் தவறி விழுந்து மாயமான இளைஞா், சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.
தஞ்சாவூா் அருகே ஆலக்குடி நடுத்தெருவைச் சோ்ந்தவா் கா்ணன் மகன் அருண்குமாா் (30). கூலித் தொழிலாளி. இவா் ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஆலக்குடி பகுதியில் ஓடும் கல்லணை கால்வாய் பாலம் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிளுடன் அருண்குமாா் கல்லணைக் கால்வாயில் தவறி விழுந்தாா்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று அருண்குமாரை தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நத்தமாடிப்பட்டி பகுதியில் கல்லணைக் கால்வாயில் அருண்குமாா் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.