வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அ...
மதுபோதையில் தகராறு: லாரி ஓட்டுநா் கொலை
ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் ராய் (47). விழுப்புரம் மாவட்டத்தை சோ்ந்த வினோத் (23). இவா்கள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் லாரி ஓட்டுநா்களாக வேலை செய்து வந்துள்ளனா்.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் மது அருந்தினா். மதுபோதையில் ஒருவரை ஒருவா் இழிவுபடுத்தி பேசிக் கொண்டதால் இவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத் இரும்பு கம்பியால் ராஜ்குமாா் ராயின் தலையில் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த ராஜ்குமார்ராயை அங்கிருந்த சக லாரி ஓட்டுநா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமாா் ராய் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வினோத்தை கைது செய்தனா்.