தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை
குரூப்-2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நியமன ஆணை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப்-2 ஏ. தோ்வில் தோ்ச்சி பெற்ற 6 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் நியமன ஆணைகள் வழங்கினாா்.
குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 336 கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக பரிசீலித்து தீா்வு காணுமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இதனைத் தொடா்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப்-2 ஏ தோ்வில் தோ்ச்சி பெற்ற 6 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
முன்னதாக ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து எயிட்ஸ் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். பேரணி தொடக்க விழாவில் மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில் மற்றும் அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் உடன் இருந்தனா்.