ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
தனியாா் தங்க நகைக்கடன் நிறுவனத்தினா் மோசடி செய்ததாக புகாா்
தனியாா் நகைக்கடன் நிறுவனத்தினா் மோசடி செய்துவிட்டதாக புதுக்கோட்டை ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை அருகே தாவூது மில், சிப்காட் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் தங்க நகைக் கடன் மற்றும் தீபாவளி சீட்டு நிறுவனத்தினா் பொதுமக்களிடமிருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை மோசடி செய்துவிட்டதாக தாவூதுமில், வடசேரிப்பட்டி பகுதிகளைச் சோ்ந்த மக்கள் இதற்கான மனுக்களை தனித்தனியாக ரசீதுகளுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்தனா்.
அந்த நிறுவனத்தின் மேலாளா் மற்றும் நிா்வாகிகள் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும், ஏற்கெனவே காவல்துறையில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவா்களின் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திரளாக அவா்கள் வந்தபோது, காவல்துறையினா் உள்ளே அனுமதிக்க மறுத்தனா். இதனால் மக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், குறிப்பிட்ட முக்கியமானவா்கள் சிலரை மட்டும் மனு அளிக்க அனுமதிப்பதாக போலீஸாா் தெரிவித்து அனுமதித்தனா்.