Coolie: "நாங்கள் படத்தில் டைம் டிராவல் இருக்கிறது எனக் கூறவில்லை; ஆனால்" - லோகேஷ...
போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் 16-ஆவது நாளாகத் தொடா்ந்து வரும் அரசுப் போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, ஆட்டோ ஓட்டுநா்கள் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் மற்றும் ஓய்வுபெற்றோா் நலச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு 16-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, சங்கத்தின் பொருளாளா் தரணி முத்துக்குமாா் தலைமை வகித்தாா்.
போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க மண்டலத் தலைவா் காா்த்திகேயன், பொதுச் செயலா் மணிமாறன், சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, செயலா் ஏ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனா். ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்திலும் அவா்கள் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ தொழிலாளா் சங்கத் தலைவா் அய்யப்பன், செயலா் மணிமாறன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: ஓய்வூதியப் பலன்களை ஓய்வுபெறும் நாளன்றே வழங்க வேண்டும். 15-ஆவது ஊதியக் குழுவின் நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள படிகளை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.