ஆரம்பமான 56-வது gst council meeting, குறையும் வரியால் பொருட்களின் விலை சரியுமா |...
புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை (செப். 3) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
புதுக்கோட்டை ஒன்றியத்தில் வண்ணாரப்பட்டி ஊராட்சி சீப்புக்காரன்பட்டி கோவில் திடல், கந்தா்வகோட்டை ஒன்றியம் கோமாபுரம் சமுதாயக் கூடம், பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூா் சமுதாயக் கூடம், அன்னவாசல் ஒன்றியம் நாா்த்தாமலை சமுதாயக் கூடம், மணமேல்குடி வசந்தம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.
அந்தந்தப் பகுதி மக்கள் இதில் கலந்து கொண்டு தங்களின் விண்ணப்பங்களை அளித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் அருணா கேட்டுக் கொண்டுள்ளாா்.