செய்திகள் :

கணவனும் மனைவியும் வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொள்ளும் தனித்துவமான கிராமம் - எங்கே இருக்கிறது தெரியுமா?

post image

ஒவ்வொரு இடத்திற்கும் தனித்துவமான கலாசாரமும் நாகரிகமும் இருக்கும். அதனை அடையாளப்படுத்துவது மொழியாக இருக்கும். இங்கு ஒரு கிராமத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் வேறு வேறு மொழிகளில் பேசி கொள்கிறார்கள். இருவரும் ஒரே மொழியில் பேச முடியாத இந்த கிராமம் குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்

இந்த கிராமத்தில் ஆண்களும் பெண்களும் முற்றிலும் வேறுபட்ட மொழிகளை பயன்படுத்தி பேசுகின்றனர். அதாவது பொருள் ஒன்றாக தான் இருக்கும், ஆனால் அதன் வார்த்தைகள் வெவ்வேறாக இருக்கின்றது.

இந்த பாரம்பரியம் நைஜீரியாவின் உபாங் கிராமத்தில் காணப்படுகிறது. ஆண்களும் பெண்களும் வெவ்வேறு மொழிகளில் பேசுகின்றனர்.

ஆனாலும் இருவர் இடையே புரிதல் காணப்படுகின்றது. பயன்படுத்தும் வார்த்தைகளும் இருவரிடமும் வேறுபட்டதாக காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஆண்கள் ஆடை என்பதற்கு ’நாகி’ என்றும் பெண்கள் ’அரிகா’ என்றும் கூறுவார்களாம். இவை வெறும் உச்சரிப்பாக மட்டும் வேறுபடவில்லை மாறாக வேறுபட்ட வார்த்தையாக உள்ளது.

கிராமத்தின் பின்னணி

இவ்வாறு பேசும் மொழிகள் குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்குகின்றன. குழந்தை பருவத்தில் இருந்தே ஆண்களும் பெண்களும் தங்களது தாய்மார்களுடன் நெருங்கி இருப்பதன் மூலமாக வெவ்வேறு மொழிகளை கற்றுக் கொள்வதாகவும் அதில் இருந்தே அவர்களின் மொழி வேறுபாடு தொடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை ஒரு சம்பிரதாயமாகவும் அவர்கள் பின்பற்றுகின்றனர். உபாங் என்னும் நைஜீரியாவில் பேசப்படும் இந்த தனித்துவமான மொழி வெவ்வேறு சொற்கள் மற்றும் அகராதிகளை கொண்டுள்ளன.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு கலாசார அடையாளங்களை குறிக்க இது உதவுவதாகவும் கருதப்படுகிறது. என்னதான் இரு பாலினரும் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தினாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வகையில் அந்த மொழி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது அங்கு இருக்கும் இளைஞர்கள் பொதுவான மொழிகளில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் மொழி அழிந்து போகும் அபாயத்தில் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி கொண்டாடும் மக்கள்– புனோல் நகரில் நடக்கும் விழாவின் பின்னணி என்ன?

ஸ்பெயின் நாட்டில் உள்ள புனோல் நகரில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 'லா டோமடினா’ (La Tomatina) என்னும் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஆகஸ்ட் 27 அன்று தனது 80-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. உல... மேலும் பார்க்க

புதுச்சேரி: கொடியேற்றிய முதல்வர் ரங்கசாமி; சுதந்திர தின விழா கிளிக்ஸ்

புதுச்சேரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாசுதந்திர தின விழா நிகழ்ச்சிசுதந்திர தின விழா நிகழ்ச்சிசுதந்திர தின விழா நிகழ்ச்சிசுதந்திர தின விழா நிகழ்ச்சிசுதந்திர தின விழா நிகழ்ச்சிசுதந்திர தின விழா நிகழ்ச... மேலும் பார்க்க

மதுரையின் வரலாற்றைப் பேசும் பசுமை நடையின் 250வது நிகழ்வு: சிலப்பதிகார ஊர்களை நினைவூட்டிய பொய்கைக்கரை

பாரம்பர்ய நகரான மதுரை, தமிழகத்தின் அரசியல், ஆன்மிகம், கலை, இலக்கிய செயல்பாட்டுகளுக்கான மையமாகும். அவை மட்டுமின்றி பல்லாயிரம் ஆண்டுகால தமிழர்களின் வரலாற்றையும், ஆட்சி செய்தர்களின் கதைகளையும் சுமந்து கொ... மேலும் பார்க்க