பூனைக்காக மினியேச்சர் நகரத்தை கட்டினாரா சீன யூடியூபர்? - வைரல் வீடியோவின் பின்னண...
நடிகையிடம் தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்ட போஜ்புரி நடிகர்!
நடிகை அஞ்சலி ராகவிடம் தவறாக நடந்துகொண்டதற்கு நடிகர் பவன் சிங் மன்னிப்பு கேட்டார்.
நடிகை அஞ்சலி ராகவ் தனது சமூக வலைதளத்தில் மிகவும் வேதனையுடன் விடியோ வெளியிட்டதற்காக நடிகர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
போஜ்புரி நடிகர் பவன் சிங் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தனது படத்தின் சக நடிகை அஞ்சலி ராகவை அவரது சம்மதம் இல்லாமல் இடுப்பில் தொட்ட விடியோ வைரலானது.
PRESS STATEMENT
— All Indian Cine Workers Association (@AICWAOfficial) August 31, 2025
Date: 31/08/2025
Issued by: All Indian Cine Workers Association (AICWA)
Recently, a disturbing incident surfaced through a video from a show featuring actress Anjali Raghav and Bhojpuri actor Pawan Singh. In the video, Anjali Raghav has openly stated that she… pic.twitter.com/Bj5kbOkA0h
இது குறித்து நடிகை அஞ்சலி ராகவ் தனது சமூக வலைதள பக்கத்தில் விடியோ வெளியிட்டு இருந்தார்.
நடிகை கூறியதென்ன?
அதில், “கடந்த 2 நாள்களாக நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். பொதுவெளியில் இப்படி தொட்டால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
நான் மிகவும் மோசமாக நினைத்து கோபமடைந்தேன். அழுகைக்கூட வந்துவிட்டது. எனக்கு அந்த நேரத்தில் என்ன செய்வதென தெரியவில்லை. ஏனெனில் அவரது ரசிகர்கள் அவரை கடவுளாகப் பார்க்கிறார்கள்” எனக் கூறியிருந்தார்.
இதற்கு பலரும் நடிகரை விமர்சித்தனர். அனைத்து இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கமும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது
மன்னிப்பு கேட்ட நடிகர்கூறியதாவது?
இந்நிலையில், நடிகர் பவன் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியதாவது:
அஞ்சலி ஜி, எனது பிஸியான ஷெட்யூலால் உங்களது நேரலையைப் பார்க்க முடியவில்லை.
இந்த விவகாரம் குறித்து எனக்குத் தெரியவரும்போத்ய் மிகவும் மோசமாக உணர்ந்தேன்.
நாம் கலைஞர்கள் என்பதால் உங்களிடம் எந்தவிதமான தவறான உள்நோக்கத்திலும் நான் அப்படி நடந்துகொள்ளவில்லை. இருந்தும் என்னுடைய செயலே எனக்கு வருத்தமளிக்கிறது. என்னை மன்னித்துவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.