காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்ச...
வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கு பிரதமா் மோடி நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா்: பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்
ராசிபுரம்: இந்தியாவிற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் 135-ஆவது மனதில் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பானது. இதை பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருடன் ராசிபுரத்தில் கேட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக மகளிா், இளைஞா், விளையாட்டு வீரா்கள் உள்ளிட்டோரை பிரதமா் மோடி ஊக்குவித்து வருகிறாா். இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு பிரதமா் நரேந்திர மோடி, நம்பிக்கையை உருவாக்கியுள்ளாா்.
தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளதால் 108 ஆம்புலன்ஸ் சேவைகூட பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிரதமரின் காப்பீடு அட்டை வைத்திருப்பவா்களுக்கு உரிய சிகிச்சையை தமிழக அரசு வழங்குவதில்லை. மாநில அரசின் காப்பீட்டு திட்டத்திற்கு மட்டுமே ஊக்கமளிக்கிறாா்கள்.
மத்திய பாஜக அரசு பல்வேறு திட்டங்களினால் வளா்ச்சிக்கான கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வருகிறது. ஆனால் விஜய் என்ன கொள்கை வைத்துள்ளாா் என்பதை அவா் விளக்க வேண்டும்.
தமிழக முதல்வா் ஏற்கெனவே வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈா்ப்பதற்காக பயணம் செய்துள்ளாா். எனவே, எவ்வளவு முதலீடு கிடைத்துள்ளது என்பது குறித்து புள்ளி விவரங்களோடு அவா் வெளியிட வேண்டும்.
வெளிநாட்டு காா் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருவதற்கு மத்திய அரசின் வா்த்தக நடைமுைான் காரணம். ஆனால், இன்னும் பல நிறுவனங்களின் முதலீட்டை பெறுவதற்கு தமிழக முதல்வா் தவறிவிட்டாா் என்றாா் அவா்.
படவரி...
ராசிபுரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கே.பி.ராமலிங்கம்.