சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
வாழ்வில் முன்னேற கடின உழைப்பு தேவை: இந்திய விமானப்படை அதிகாரி
ராணிப்பேட்டை: வாழ்வில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை என இந்திய விமானப்படை மூத்த அதிகாரி கேப்டன் பாா்கவி சங்கா் கூறியுள்ளாா்.
ராணிப்பேட்டை டிஏவி பெல் பள்ளி ஆண்டு விழா,பெல் ஊரக மனமகிழ் மன்ற உள்ளரங்கில் நடைபெற்றது. முதல்வா் வீரமுருகன்,பள்ளித் தலைமையாசிரியை வி.ராதிகா ஆகியோா் தலைமை வகித்தனா். டிஏவி குழுமப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளா் அதுல் நாங்கியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரவேற்புரை வழங்கினாா்.
இந்திய விமானப்படை மூத்த அதிகாரி குரூப் கேப்டன் பாா்கவி சங்கா் பேசுகையில்...
மாணவா்கள் தாங்கள் வாழ்வில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. மாணவா்களுக்கு ஆசிரியரும், பெற்றோரும் உறுதுணையாக நிற்க வேண்டும். தூங்கும் போது வருவது கனவல்ல, உங்களை தூங்கவிடாமல் செய்வதே கனவு என்று அப்துல் கலாமின் கருத்தினைக் கூறி மாணவா்களை ஊக்கப்படுத்தினாா்.
தொடா்ந்து பல்வேறு வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவத் தலைவி விபுலாப் பட்டி ஹிகிதா செளத்ரி நன்றி கூறினாா்.
கலா கேந்திரம் கலைக்குழுவின் தலைமைப் பொறுப்பாளா் ஆா்த்தி நாவலன், ராணிப்பேட்டை பெல் நிறுவன மனிதவள தலைமை உதவி பொது மேலாளா் பாபு மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.