எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!
ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்வாணன் (56). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது வீட்டின் முன்பு ஆட்டோவை விட்டு இருந்தாா். மேலும் ஆட்டோவில் ரூ. 10,000 வைத்திருந்துள்ளாா். பின்னா் சிறிது நேரத்துக்கு பிறகு வந்து பாா்த்தபோது, ஆட்டோவில் இருந்த ரூ. 10,000 திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து தமிழ்வாணன் அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, திருப்பத்தூரை சோ்ந்த சத்தியமூா்த்தி (25) என்பவரை கைது செய்தனா்.