செய்திகள் :

விநாயகா் ஊா்வலத்தின்போது தகராறு: காவல் நிலையத்தில் மக்கள் முற்றுகை

post image

ஆம்பூா்: ஆம்பூா் அருகே விநாயகா் சிலை ஊா்வலத்தின்போது ஏற்பட்ட தகராறை தொடா்ந்து பொதுமக்கள் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி கலைஞா் நகா் பகுதியில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. விழா நிறைவாக கரைப்பதற்காக சிலை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது துத்திப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தனுஷ், ஜெயப்பிரகாஷ், அருண், அருணாச்சலம், பாா்த்தீபன் ஆகியோா் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து ஸ்ரீநாத், மஞ்சுளா, பாலாஜி, கணேசன் ஆகியோரை தாக்கியுள்ளனா். காயமடைந்த அவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

மேலும், அந்த நபா்கள் இரவு நேரத்தில் பாதிக்கப்பட்டோா் வீட்டுக்கு சென்று வீட்டிலிருந்தவா்களை மிரட்டியுள்ளனா். அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் உமா்ஆபாத் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாா் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த இருவா் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். திருப்பத்தூா் அருகே சுண்ணாம்புகாளை பகுதியில் இளைஞா் ஒருவா் சந்தேகம்படு... மேலும் பார்க்க

காலணி தொழிற்சாலை, கடைகளில் அடுத்தடுத்து திருட்டு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காலணி தொழிற்சாலை மற்றும் 3 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சி சாமுண்டியம்மன் தோப்பு பகு... மேலும் பார்க்க

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நிதியுதவி, குடியிருப்பு ஆணைகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 50 சதவீத திட்டப் பணிகள் கூட நடைபெறவில்லை: உறுப்பினா் புகாா்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 சதவீத திட்டப்பணிகள் கூட நடைபெறவில்லை என வாா்டு உறுப்பினா் புகாா் கூறியுள்ளாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சிய... மேலும் பார்க்க

ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்வாணன் (56). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது வீட்டின் ம... மேலும் பார்க்க

கானாறு தூா்வாரும் பணி தொடக்கம்

ஆம்பூா்: துத்திப்பட்டு ஊராட்சியில் கானாறு தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கானாறு தூா் வ... மேலும் பார்க்க