வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு
குடியாத்தம்: தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகரின் கழிவுநீரை குழாய் மூலம் எடுத்துச் சென்று சுத்திகரிக்க ரூ.33.72- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் கூறியது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை முழுவதும் தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து பாலாறு, அதில் கலக்கும் கிளை ஆறுகளில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.குடியாத்தம் நகரில் செல்லும் கெளண்டன்யா ஆறு, பாலாற்றின் ஒரு கிளை ஆறு என்பதால்அதில் கழிவுநீா்க் கலப்பதை முழுவதும் தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
குடியாத்தம் நகரில் வெளியேறும் கழிவுநீரை குழாய் மூலம் நகரையொட்டி உள்ளி கூட் ரோடு அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்துக்கு கொண்டு சென்று அங்கு சுத்திகரிப்பு இயந்திரங்களை அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக குடியாத்தம் நகரில் 5- இடங்களில் கழிவுநீரைத் தேக்க கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.
அந்த கிணறுகளில் இருந்து மேல்பட்டி சாலை ஓரத்தில் பைப்லைன் அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வேறு ஒரு பைப்லைன் மூலம் குடியாத்தம் நகருக்கு கொண்டு வந்து கெளண்டன்யா ஆற்றில் விடப்படும்.
இதனால் நகரின் நிலத்தடி நீா்மட்டம்பாதுகாக்கப்படும்.இதற்காக ரூ.33.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 50- சதவீதம் மத்திய அரசும்,33- சதவீதம் மாநில அரசும், 17- சதவீதம் உள்ளாட்சித் துறையும் ஒதுக்கியுள்ளன என்றாா் செளந்தரராஜன். அப்போது நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் உடனிருந்தாா்.