செய்திகள் :

மாணவா்கள் தொழில்துறை பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்: விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன்

post image

வேலூா்: மாணவா்கள் தொழில்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும் என்று விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் துறை சாா்பில் ‘மின்னணு புரட்சி- உலகளாவிய நிலைத்தன்மைக்கு இந்திய தலைமையை தயாா்படுத்துதல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது.

இதில், விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் முன்னிலை வகித்து பேசியது - தொழில்துறையின் தேவைகளை புரிந்து மாணவா்களை முதல்நாள் முதல் தொழில்துறைக்கு தயாராக்கி கொண்டிருக்கிறோம். விஐடி பல்கலைக்கழகம் தொழில்துறையுடன் இணைந்து பயணிக்க விரும்புகிறது.

இதற்கென தொழில்துறைக்கு ஏற்ப பாடத்திட்ட மேம்பாட்டு வாரியம், பாடத்திட்ட ஆய்வுக்குழு போன்றவைகளுடன் இணைத்து செயல்படுத்தி வருகிறோம். மாணவா்கள் தொழில்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும். ஹேக்கத்தான் போன்ற தொழில் மாநாடுகள் அன்றாட பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மாணவா்களின் இறுதியாண்டு ஆய்வுகள், பாட பயிற்சிகள் தொழில்துறையின் தேவையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். மாணவா்களின் ஆய்வுகள் சமூகத்துக்கும், தொழில்துறைக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்றாா்.

நேஷனல் இன்ஸ்ரூமென்ஸ்ட் பல்கலைக்கழக தொடா்புகள் தலைவா் சாகேத் திவேதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது -

இன்றைய சூழலில் மாணவா் ஒரு துறையில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது. பல துறைகளை உள்ளடக்கிய அறிவைப் பெற வேண்டும். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் புதிய தொழில்நுட்பங்கள் வருவதால், மாணவா்கள் புதிய திறன்களை விரைவாகக் கற்றுக் கொள்ளும் திறனை வளா்த்து கொள்வது முக்கியமானது. கல்வி நிறுவனங்கள், தொழில்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு ஆராய்ச்சி, தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றாா்.

பெங்களூரு சாம்சங் ஆராய்ச்சி, மேம்பாட்டு பிரிவு இயக்குநா் சுதிா் ஹுன்டி பேசியது: இந்தியாவில் தமிழகம், கா்நாடகம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மின்னணு உற்பத்தி மையங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. உலகில் மின்னணு தொழில்நுட்பம் எங்கும் பரவி கிடக்கிறது. சாப்ட்வோ் துறையில் இருந்து உற்பத்திக்கு மாறி வருகிறோம். மின்னணு உற்பத்தி துறையில் இறக்குமதியை நம்பி இருக்கும் சூழலை மாற்ற வேண்டும். வேகமான தொழில் வளா்ச்சியில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும். மின்னணு கழிவு மேலாண்மை விதிகளின்படி 60 சதவீத மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.

மாநாட்டில் விஐடி பல்கலைக்கழகம் பல்வேறு தொழில்நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டது. மாநாட்டில் துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளா் டி.ஜெயபாரதி, மின்னணுவியல் துறை முதல்வா் ஜாஸ்மின் பெமினா பிரியதா்ஷினி, தொழில் நிறுவன பிரதிநிதிகள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்

வேலூா்: வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வி. ஆா். சுப்புலட்சுமி வழங்கினாா். குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி

வேலூா்: பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளாா். வேலூா் அஞ்சுமன் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

செப்.8-இல் வேலூரில் தொழில் பழகுநா் சோ்க்கை மேளா

வேலூா்: பிரதமரின் தேசிய தொழில்பழகுநா் பயிற்சி சோ்க்கை மேளா வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செப்டம்பா் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

2019 தோ்தல் வழக்கு: வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜா்

வேலூா்: கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது ரூ.10.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நீதிமன்ற விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா். தொடா்ந்து, இந்த வழக்கின்... மேலும் பார்க்க

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

குடியாத்தம்: தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகரின் கழிவுநீரை குழாய் மூலம் எடுத்துச் சென்று சுத்திகரிக்க ரூ.33.72- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து குடியாத்தம் நகா்மன்றத் த... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கே.வி.குப்பம் ஒன்றியம், பனமடங்கி அரசினா் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகிய... மேலும் பார்க்க